படைப்பிரிவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு சட்டத்தின் கீழ் விதிகள் 2023
June 2 , 2025 7 days 33 0
படைப்பிரிவுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் ஓர் அரசிதழ் அறிவிப்பு மூலம் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது படைப்பிரிவுகளுக்கு இடையிலான அமைப்புகளின் (ISO) பயன் மிகு கட்டளை, கட்டுப்பாடு மற்றும் திறம் மிக்க செயல்பாட்டினை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சட்டமானது ஆயுதப் படைகளின் ஒவ்வொரு பிரிவுக்கும் பொருந்தும் வகையில் குறிப்பிட்ட விதிகள் மற்றும் சில நிபந்தனைகளை மாற்றாமல், ஒழுங்குமுறையையும் சீரான நிர்வாகத்தையும் பேண உதவுகிறது.