TNPSC Thervupettagam

படையடுக்கு வான்கலத்தின் முதல் பறத்தல் சோதனை

May 8 , 2025 17 hrs 0 min 26 0
  • இந்தியா ஒரு படையடுக்கு வான்கலத்தின் முதல் பறத்தல் சோதனைகளை மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இந்த அமைப்பு ஆனது, இந்தியாவின் புவிக் கண்காணிப்பு மற்றும் உளவு, ஆய்வு மற்றும் தடங்காண் திறன்களை தனித்துவமாக மேம்படுத்தும்.
  • இது பூமியிலிருந்து 17 முதல் 22 கிலோமீட்டர் வரையிலான படையடுக்கு மண்டலத்தில் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் உயரமான, ஆளில்லா வான்வழி வாகனம் ஆகும்.
  • செயற்கைக்கோள்கள் அல்லது விமானங்களைப் போலல்லாமல், இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சில நாட்கள் அல்லது சில வாரங்கள் நிலைநின்று, ஒரு தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு ஆதரவை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்