TNPSC Thervupettagam

பட்டாசு தடை குறித்த உச்ச நீதிமன்றம்

September 16 , 2025 14 hrs 0 min 26 0
  • 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 ஆம் தேதியன்று டெல்லி மற்றும் தேசியத் தலைநகரப் பிராந்தியத்தில் (NCR) பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாட்டின் மீது உச்ச நீதிமன்றம் முழுமையான தடையை விதித்தது.
  • பட்டாசுகளை தடை செய்யப்பட்ட காலங்களில் சேமித்துப் பயன்படுத்தலாம் என்பதால் பகுதி அளவிலான கட்டுப்பாடுகள் பயனற்றதாக இருந்ததால் இந்தத் தடை விதிக்கப்பட்டது.
  • இந்தத் தடையை குறிப்பிட்ட பிராந்தியங்களில் மட்டும் அமல்படுத்தும் நடைமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், காற்று மாசுபாட்டிற்கு இந்தியா முழுவதிற்குமான ஒரு கொள்கைத் தேவை என்றும் சுட்டிக் காட்டியது.
  • டெல்லிக்கு வெளியே உள்ள நகரங்களில், அமிர்தசரஸ் போன்ற நகரங்களில் காற்று மாசுபாட்டின் அளவானது சில நேரங்களில், குளிர்காலப் பண்டிகைகளின் போது டெல்லியை விட அதிகமாக உள்ளது என்பதை நீதிமன்றம் எடுத்துக்காட்டியது.
  • காற்று மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக ஒரே மாதிரியான தேசிய நடவடிக்கை அவசியம் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது, மேலும் பட்டாசுத் தொழில் துறையில் உள்ள தொழிலாளர்கள் மீதான பொருளாதாரத் தாக்கத்தையும் குறிப்பிட்டது.
  • இந்த வழக்கானது இரண்டு வாரங்களில் மேற்கொண்டு விசாரணைக்கு பட்டியலிடப் பட்டுள்ளது என்ற நிலையில், மேலும் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திடம் (CAQM) ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்