பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகளின் தேசியப் பட்டியல்
August 9 , 2026 9 hrs 0 min 15 0
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனமானது (ZSI), லெபிடோப்டெராவின் (பட்டாம் பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள்) தேசியப் பட்டியல் நிறைவடைந்ததை அறிவித்தது; அதன் இறுதித் தொகுதி Zoo taxa-வில் வெளியிடப்பட்டது.
பல்லுயிர் அறிவியலில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்திய லெபிடோப்டெரா என்பது 3,705 பேரினங்கள், 240 துணைக்குடும்பங்கள், 102 குடும்பங்கள், 31 பேரினங்கள் எனப் பரவியுள்ள 13,703 சிற்றினங்களைக் கொண்டது.
இது உலகளவில் அறியப்பட்ட அனைத்து பட்டாம்பூச்சி மற்றும் அந்துப்பூச்சி சிற்றினங்களில் ஏறக்குறைய 8.25%-ஐப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஜியோமெட்ராய்டியா அந்துப்பூச்சிகளுக்கு இந்தியா ஒரு உலகளாவிய முக்கிய மையமாக விளங்குகிறது.
இந்த முன்னெடுப்பின் ஒரு முக்கிய மைல்கல், ஜியோமெட்ராய்டியா (Geometroidea) எனும் அந்துப்பூச்சி பேரினத்திற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முன்னோடிப் பட்டியல் ஆகும்.
இது, இரவு நேர மகரந்தச் சேர்க்கையாளர்களுக்கான உலகளாவிய சரணாலயமாக இந்தியாவை நிறுவுகிறது.
இந்தியாவில் உள்ள ஜியோமெட்ராய்டியா பேரினம், 479 பேரினங்கள், 13 துணைக் குடும்பங்கள் மற்றும் 4 குடும்பங்களில் பரவியுள்ள 2,205 சிற்றினங்களைக் கொண்டு உள்ளது.
இந்தப் பேரினத்தில் உலகில் அறியப்பட்ட சிற்றினங்களில் இது 8.80% ஆகும்.
உயரமான, உறைபனி நிறைந்த இமயமலைப் பகுதிகள் முதல் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஈரப்பதமான, பசுமையான வெப்பமண்டல மழைக்காடுகள் வரை பரந்துள்ள இந்தியாவின் முற்றிலும் மாறுபட்ட சூழல் மண்டலங்கள், பரிணாம சரணாலயங்களாகச் செயல்படுகின்றன.