பட்டியலிடபட்ட சாதியினர்/பட்டியலிடபட்ட பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவர்
March 26 , 2026 185 days 325 0
தமிழ்நாடு மாநிலப் பட்டியலிடபட்ட சாதியினர்/பட்டியலிடபட்ட பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பணிகளை கவனிக்கும் பொறுப்பு அதன் துணைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் தலைவர் நீதிபதி S. தமிழ்வாணனின் மறைவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
துணைத் தலைவர் இமயம் (V. அண்ணாமலை) தற்காலிகமாக இந்தப் பொறுப்புகளை ஏற்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான ஆணையை தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ளது.
இந்த ஆணையம் மாநிலத்தில் உள்ள பட்டியலிடபட்ட சாதியினர்/பட்டியலிடபட்ட பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கப் பணியாற்றுகிறது.