பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ்களை வழங்கச் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
June 5 , 2023 795 days 368 0
சமீபத்தில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் இருந்து பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றப் பட்டுள்ளன.
தற்போது தமிழக அரசானது, இவ்விருச் சமூகத்தினருக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கும் செயல்முறையினை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
அவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
எந்த சாதிச் சான்றிதழும் இல்லாதவர்கள்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும்
சில புகார்களுடன் கூடிய அல்லது சம்பந்தப்பட்ட தாலுக்கா அலுவலகத்தில் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் விடுபட்டுள்ளச் சான்றிதழ்களை வைத்து இருப்பவர்கள்.