பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உயர்வு
October 10 , 2022 1084 days 498 0
தெலுங்கானா அரசானது, பட்டியலிடப்பட்டப் பழங்குடியினச் சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
பட்டியலிடப்பட்டப் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தச் செய்வதற்கான ஒரு மசோதாவை தெலுங்கானா சட்டசபை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவேற்றியது.
அதே ஆண்டில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக இந்த மசோதா இந்திய அரசிடம் அனுப்பப்பட்டது.
ஆனால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த மசோதா இன்னும் குடியரசுத் தலைவரின் முன் நிலுவையில் உள்ளது.