2021 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலினப் பழங்குடியினர்) ஆணை (திருத்தம்) என்ற ஒரு மசோதாவினை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (பட்டியலினப் பழங்குடியினர்) ஆணையினைத் திருத்தி அமைக்கிறது.
இம்மசோதா, அருணாச்சலப் பிரதேசத்தின் அபோர் வகை பழங்குடியினரை அறிவிக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்குகிறது.
இது சில குறிப்பிட்ட பழங்குடியினருக்குப் பதிலாக இதர சில பழங்குடியினரை அந்தப் பட்டியலில் சேர்க்கிறது.
அவை தாய் காம்தி, மிஷ்மி-கமான் (மிஜீ மிஷ்மி), இடு (மிஷ்மி) மற்றும் தரோன் (திகாரு மிஷ்மி) ஆகியனவாகும்.
அரசியலமைப்புச் சட்டமானது, வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் பட்டியலினப் பழங்குடியினரைக் குறிப்பிடுவதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கிறது.
மேலும் அறிவிக்கப்பட்டப் பட்டியலினப் பழங்குடியினரின் பட்டியலைத் திருத்தி அமைக்கவும் அது பாராளுமன்றத்திற்கு அனுமதி வழங்குகிறது.