TNPSC Thervupettagam

பண வழங்கீட்டு ஒழுங்குமுறை வாரியம்

January 9 , 2026 3 days 47 0
  • பண வழங்கீட்டு ஒழுங்குமுறை வாரியத்தின் (PRB) முதல் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
  • PRB என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்தியாவில் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகளை ஒழுங்குபடுத்தி மேற்பார்வையிடும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இது 2007 ஆம் ஆண்டு பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைகள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நிறுவப்பட்டது.
  • இது முந்தைய பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைகளின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை வாரியத்திற்கு (BPSS) மாற்றாக அமைகிறது.
  • இந்திய அரசாங்கத்தினால் இதற்கான திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், PRB 2025 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
  • அதன் முக்கியச் செயல்பாடுகளில் பண வழங்கீட்டு முறைகளை அங்கீகரிப்பது (UPI, அட்டைகள், பணக் கோப்புகள், RTGS), தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் தர நிலைகளை அமைத்தல், இடர் மேலாண்மை, கொள்கை வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வை மற்றும் அமலாக்கம் ஆகியவை அடங்கும்.
  • PRB ஆனது டிஜிட்டல் வழி பண வழங்கீட்டு நிர்வாகத்தை வலுப்படுத்துவதோடு, நுகர்வோர் நம்பிக்கையை மேம்படுத்துகிறது மற்றும் இந்தியாவின் பண வழங்கீட்டுச் சூழல் அமைப்பில் முறையான நிலைத் தன்மையை உறுதி செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்