பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளை மாற்றியமைப்பதற்கான அறிவிப்பு
May 8 , 2023 824 days 363 0
மத்திய அரசின் மாற்றியமைக்கப்பட்ட பணமோசடித் தடுப்புச் சட்ட விதிகள் ஆனது, இரண்டு அரசிதழ் அறிவிப்புகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விதிகளானது, அரசு சாரா நிறுவனங்கள் (தன்னார்வம்) மற்றும் "அரசியல் ரீதியான பிரபல நபர்களை" கடுமையான ஆய்வுக்கு உட்படுத்துகின்றன.
இது அமலாக்க இயக்குநரகம் போன்ற முகமைகளின் நிதிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்வதற்கான அணுகல் அதிகாரமானது, எந்த எந்த நபர்கள் மற்றும் எந்த நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்ற வரம்பினைக் கணிசமாக விரிவுபடுத்துகிறது.
இந்த விரிவுபடுத்தப்பட்ட வரையறைகளினுள், சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் விதிகளின் கீழ் இணைய சங்கேதப் பணங்களும் அடங்கும்.
இந்தப் புதிய விதிகள் ஆனது, வங்கி/நிதி நிறுவனங்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதனை கட்டாயமாக்குகிறது.
அவை முன்னதாக பணமோசடி தடுப்புச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
இந்த விதிகளானது, பிட்காயின் மற்றும் ஈத்தேரியம் போன்ற இணைய சங்கேதப் பணங்கள் மூலம் மற்றொரு நபருக்காக "அல்லது அவர் சார்பாக" மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளன.
அமலாக்க இயக்குநரகம் (ED) எனபது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றச் சாட்டுகளை விசாரிக்கும் முக்கிய நிறுவனமாகும்.