மத்திய அரசானது தொழிலாளர்களின் பணி நேரங்களை மாநில அரசுகள் தங்களின் தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்ள அனுமதியளித்திட வேண்டி ஒரு அவசரச் சட்டத்தை இயற்ற உள்ளது.
இந்த அவசரச் சட்டமானது பணியாளர்களின் பற்றாக்குறை என்ற பிரச்சினையைக் களைய இருக்கின்றது.
இது நிறுவனங்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க வழிவகை செய்கின்றது.
மேலும் இது தொழில்சார் பாதுகாப்பு, பணி நிலைமை மற்றும் சுகாதாரம் குறித்த நெறிமுறைகளையும் செயல்படுத்த இருக்கின்றது.
இந்த நெறிமுறையானது பணி நேரங்களை அறிவிக்க மாநிலங்களுக்கு உதவ இருக்கின்றது.
தற்பொழுது, சட்டத்தின் படி பணியாளர்களின் குறிப்பிடப்பட்ட பணி நேரம் ஒரு நாளைக்கு 8 மணி நேரமாகும்.
மத்தியப் பட்டியலில் உள்ள சட்டங்களை மாநில அரசுகள் திருத்த முடியாது.
மாநில அரசுகள் மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் ஆகியவற்றில் உள்ள சட்டங்களின் மீது மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.