சிக்கிம் மாநிலம், பணிக்குச் செல்லாத 32,000 தாய்மார்களுக்கு தலா 20,000 ரூபாய் காசோலைகளை வழங்குவதன் மூலம் பெண்களுக்கான தனது மாபெரும் திட்டத்தினைத் தொடங்கியது.
பணிக்குச் செல்லாத தாய்மார்களான அனைத்துப் பெண்களுக்கும் ஆமா சக்திகரன் யோஜனாவின் கீழ் ஆண்டிற்கு 40,000 ரூபாய் வழங்கப்படும்.
சிக்கிம் அரசானது, பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறையின் கீழ் 'நாரி அதாலத்கள்' அமைக்கப்படும் என்றும் அறிவித்தது.
நாரி அதாலத் என்பது, குறிப்பாக கிராமப்புறம் மற்றும் பகுதியளவு நகர்ப்புறப் பகுதிகளில், அணுகக்கூடிய மற்றும் முறைசாரா நீதியை வழங்குவதற்காக பெண்களால் நடத்தப்படும் ஒரு சமூக அடிப்படையிலான மன்றமாகும்.