TNPSC Thervupettagam

பணிநலன் குறித்த அறிக்கை

March 13 , 2022 1270 days 637 0
  • இது சர்வதேச தொழிலாளர் மன்றத்தினால் வெளியிடப்பட்டது
  • இந்த அறிக்கையானது மகப்பேறு, மரபுவழி, பெற்றோர், குழந்தை மற்றும் நீண்ட காலப் பராமரிப்பு உள்ளிட்ட நலன்கள் தொடர்பான தேசியச் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய ஒரு உலகளாவியக் கண்ணோட்டத்தினை வழங்கச் செய்கிறது.
  • இந்தச் சட்டப்பூர்வப் பாதுகாப்புகளின் வரம்புகளிலிருந்து சில தொழிலாளர்கள் எவ்வாறு விடுபடுகின்றனர் என்பதை இவ்வறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
  • இந்த அறிக்கை மகப்பேறு வயதிலுள்ள பத்தில் 3 பெண்கள் அல்லது 649 மில்லியன் பெண்கள், மகப்பேறுப் பாதுகாப்பு மருத்துவ வசதியைத் தேவைக்கும் குறைவாகவே பெறுகின்றனர் என கண்டறிந்துள்ளது.
  • இதன் பொருள் என்பது இந்த நிலை 2000 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மகப்பேறுப் பாதுகாப்பு உடன்படிக்கையின் படி முக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத ஒரு நிலையாகும்.
  • முதன்மையான மகப்பேறு வயதினைக் கொண்டுள்ள 1.2 பில்லியனுக்கும் அதிகமான ஆண்கள் தந்தைவழியிலான மகப்பேறு விடுப்பிற்கு எந்தவித உரிமையும் இல்லாத நாடுகளில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்