ஆராய்ச்சியாளர்கள் 4,500 முதல் 4,800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு நபரின் உடலிலிருந்து முதல் முழுமையான பண்டைய எகிப்திய மரபணுவை வரிசைப் படுத்தி உள்ளனர்.
இது இன்று வரை எகிப்திலிருந்து பெறப்பட்ட பழமையான டிஎன்ஏ மாதிரியாகும்.
இந்த உடல் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் பழையப் பேரரசின் போது உயிரிழந்த ஓர் இளம் ஆணினுடையதாகும்.
அவரது டிஎன்ஏவில் சுமார் 22% ஆனது மெசபடோமியாவைச் சேர்ந்த (இன்றைய ஈராக், மேற்கு ஈரான், தெற்கு சிரியா, தென்கிழக்கு துருக்கி) ஆரம்பகால விவசாயிகளுடன் அதிகளவில் பொருந்துகிறது.
முன்னதாக, இந்தத் திருத்தப்பட்ட கி.மு. 787 முதல் திருத்தப்பட்ட கி.பி. 23 வரையிலான பிற்கால காலங்களிலிருந்து மூன்று பண்டைய எகிப்திய மரபணு தரவுத் தொகுப்புகள் மட்டுமே கிடைத்தன.