TNPSC Thervupettagam

பண்டைய தெலுங்கு கல்வெட்டு

February 6 , 2026 6 days 53 0
  • ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிட்டிகயகுல்லா என்ற இடத்தில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த ஒரு அரிய தெலுங்குக் கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கல்வெட்டு முற்காலத் தெலுங்கு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளதுடன், தெலுங்கு மொழி பிராகிருத மொழியின் செல்வாக்கிலிருந்து ஒரு சுதந்திரமான மொழியாக மாறியதைக் காட்டுகிறது.
  • இது 'நவ கட்டா' என்று அழைக்கப்படும் ஒரு புதிய கரை கட்டப்பட்டதைப் பதிவு செய்கிறது.
  • இந்தக் கட்டுமானப் பணி சிற்பி அல்லது கைவினைஞராக இருந்திருக்கலாம் என்று நம்பப்படும் பிரணிமில்லி ஆச்சாரி என்பவரால் செய்யப்பட்டது.
  • ஆட்சி புரிந்த மன்னரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்தக் கல்வெட்டு ரெனாடு பகுதியுடன் தொடர்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்