TNPSC Thervupettagam

பண்டைய வைணவ நினைவுச் சின்னம்

January 4 , 2026 3 days 66 0
  • ஸ்ரீ வைணவ சமயத்தின் முதல் ஆச்சார்யரான நாதமுனிகளின் சிலை, 2000 ஆம் ஆண்டில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்தக் கண்டுபிடிப்புத் தளம் ஆனது அரியலூர் மாவட்டத்தில் உள்ள சொர்க்கப் பள்ளத்தில் (செம்போடை என்றும் அழைக்கப்படுகிறது) உள்ளது.
  • முன்னதாக, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய ஸ்ரீனிவாசப் பெருமாளின் சிலை அதே இடத்தில் ஒரு மரத்தின் கீழ் பாதி புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • பின்னர் அந்த இடத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் மற்றும் நாதமுனிகளின் சிலைகளை வைக்க இரண்டு கோயில்கள் கட்டப்பட்டன.
  • இந்த இடம் நாதமுனிகளின் திருவரசு (நினைவுச் சின்னம்) என்று அடையாளம் காணப் பட்டுள்ளது என்பதோடு இது அவரது இறுதி நாட்களில் அங்கு அவர் இருந்ததை உறுதிப் படுத்துகிறது.
  • நாதமுனிகள் 9 ஆம் நூற்றாண்டு பொது சகாப்தத்தில் (கி.பி) வாழ்ந்தார்.
  • நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் (திராவிட வேதம்) 4,000 பாடல்களைத் தொகுத்த பெருமை அவருக்கு உண்டு.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்