வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சட்ட விரோதமாக வாங்கிக் குவித்த நபர்கள் குறித்த பண்டோரா ஆவணங்களைச் சர்வதேசப் புலனாய்வுப் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
வியட்நாம், பெலிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலுள்ள 29,000 வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் உரிம விவரங்களை உள்ளடக்கிய மற்றும் வரி ஏய்ப்பு வாய்ப்பினைக் கொண்டுள்ள வெளிநாடுகளிலுள்ள 14 நிறுவனங்களைச் சேர்ந்த 11.9 மில்லியன் ஆவணங்கள் இதில் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் 380 இந்தியக் குடிமகன்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.