TNPSC Thervupettagam

பண்ட்-மிர்ஸா ஒப்பந்தம்

July 21 , 2017 3107 days 1546 0
  • பண்ட்-மிர்ஸா ஒப்பந்தம் என்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “இரு நாடுகளுக்கு இடையிலான புண்ணியத் தலங்களுக்குச் செல்வதற்கான நெறிமுறை” ஆகும். இது 1974 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது.
  • பண்ட்-மிர்ஸா ஒப்பந்தமானது, இருநாட்டு மக்களும் மற்ற நாட்டில் இருக்கும் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வழிபட வகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் ,எந்த புண்ணியத் தலங்களுக்கு மற்ற நாட்டவர் அனுமதிக்கப்படுவர் என்ற பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த உடன்படிக்கையின்படி, பட்டியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புண்ணியத் தலங்கள் ஒழுங்காகப் பராமரிக்கப்படுவதோடு, அதன் புனிதத்தன்மையையும் பாதுகாக்கப்பட வேண்டும் . இது புண்ணியத்தலம் அமைந்துள்ள அந்தந்த நாட்டின் பொறுப்பு ஆகும்.
  • ஹஸ்ரத் மொய்னூதின் சிஷ்தி (அஜ்மீர்), ஹஸ்ரத் நிஜாமுதின் அவுலியா (டெல்லி), ஹஸ்ரத் அமிர் குஸ்ரோ (டெல்லி), ஹஸ்ரத் முஜதித் அல்ஃப் சனி (சிர்ஹிந்த் ஷெரீஃப்) மற்றும் ஹஸ்ரத் குவாஜா அலாவுதீன் அலி அஹ்மத் சபிர் (கல்யார்க ஷரீஃப்) ஆகியோரின் தர்காக்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது .
  • இந்தியர்கள் சென்று வழிபட பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ள புனிதத்தலங்கள்:
    • ஷாதானி தர்பார் (ஹைட் பீடாபி)
    • ஸ்ரீ காதாஸ்ராஜ் தாம் (லாகூர்)
    • ஸ்ரீ நன்கானா சாஹிப் குருத்துவாரா (ராவல்பிண்டி)
    • ஸ்ரீ பாஞ்சா சாஹிப் குருத்துவாரா (ராவல்பிண்டி)
    • ஸ்ரீ தேரா சாஹிப் குருத்துவாரா (லாகூர்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்