தமிழ்நாடு மாநில அரசானது, அதன் ஊழியர்களின் பதவி உயர்வில் 4% என்ற இட ஒதுக்கீட்டை வழங்க உள்ளது.
ஒரு பதவியின் பணியாளர்களது எண்ணிக்கை ஐந்துக்கும் அதிகமாக இருந்தால், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட அடையாளம் காணப்பட்ட பதவிகளுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீடு பொருந்தும்.
ஒவ்வோர் அரசுத் துறை நிறுவனத்திலும் 25 ஆம் நிலை வரையிலான ஊதியம் பெறும் பதவிகளுக்கு மட்டுமே இத்தகையதொரு அடையாளம் கண்டறிதல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் மூலம் பணி சேர்ப்பு செய்வதிலும் (குறைந்த ஊதிய அளவு முதல் அதிக ஊதிய அளவு வரை) இந்த இடஒதுக்கீடு பொருந்தும்.
பார்வைத் திறன் குறைபாடு மற்றும் குறைவான பார்வைத் திறன் உள்ளவர்களுக்கு 1% இடங்களும், கேட்கும் திறனற்றவர் மற்றும் கேட்கும் திறனில் சிரமம் உள்ளவர்களுக்கு 1% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருமூளை வாதம், தொழுநோய் குணப்படுத்தப்பட்டவர்கள், குள்ளத்தன்மை, அமிலத் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மற்றும் தசைநார் சிதைவு உள்ளிட்ட சில உடலியக்கக் குறைபாடுகளுக்கு 1% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு விதியானது, 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் 34வது பிரிவின் விதிகளிலிருந்து அரசாங்கம் தனது எந்தவொரு நிறுவனத்திற்கும் விலக்கு அளிக்க அனுமதிக்கிறது.