இந்தியத் தலைமை நீதிபதி N.V. ரமணா அவர்கள் 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த 9 புதிய நீதிபதிகளுள் நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி B.V. நாகரத்னா மற்றும் நீதிபதி P.S. நரசிம்மா ஆகிய மூன்று நீதிபதிகள் அடுத்தடுத்து இந்தியத் தலைமை நீதிபதி பொறுப்பினை ஏற்க உள்ளனர்.
இந்த 9 நீதிபதிகளின் நியமனத்தோடு உச்ச நீதிமன்றத்தின் அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையான 34 என்ற அளவில் இந்தியத் தலைமை நீதிபதியோடுச் சேர்த்து 33 ஆக உயர்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இதுவே பெண் நீதிபதிகள் அதிக அளவில் உள்ள ஒரு எண்ணிக்கையாகும் (4 நீதிபதிகள்).
உச்ச நீதிமன்றத்தில் ஒரே சமயத்தில் ஒன்பது நீதிபதிகள் பதவியேற்பது இதுவே முதன்முறையாகும்.
மேலும், ஒரு பதவியேற்பு நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது இதுவே முதன்முறையாகும்.
குறிப்பு
கடந்த 71 ஆண்டுகளில் இன்று வரை எட்டு பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப் பட்டுள்ளனர்.
முதல் பெண் நீதிபதியான M. பாத்திமா பீவி 1989 ஆம் ஆண்டில் நியமிக்கப் பட்டார்.
நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஒரு பெண் நீதிபதி ஆவார்.