TNPSC Thervupettagam

பதவிப் பிரமாணம் - திரௌபதி முர்மு

July 27 , 2022 1032 days 571 0
  • டெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய மன்றத்தில் இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார்.
  • அவருக்கு இந்தியத் தலைமை நீதிபதி NV ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • அவருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கிய மரியாதை அளிக்கப்பட்டதையடுத்து, அவர் பதவிப் பிரமாணப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
  • ஆயுதப் படைகளின் புதிய தலைமைத் தளபதி, ராஷ்டிரபதி பவனின் முன்புறத்தில் நிறுத்தப் பட்டிருந்த முப்படைகளின் பாதுகாப்பு வழங்கலை ஆய்வு செய்தார்.
  • நாட்டின் மிக உயரிய அரசியலமைப்புப் பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினக் குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்தார்.
  • 64 வயதான இவர் இந்தியாவின் இளம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.
  • அவர் 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராய்ராங்பூரில் ஒரு சந்தாலி குடும்பத்தில் பிறந்தார்.
  • இவரது குடும்பத்தினர் இவருக்கு வழங்கியப் பெயர் புட்டி துது என்பதாகும்.
  • இவரது பள்ளி ஆசிரியர் இவருக்கு திரௌபதி என்று பெயர் மாற்றம் செய்தார்.
  • முர்மு 2015 ஆண்டில் ஜார்கண்ட் ஆளுநராகப் பதவியேற்றார்.
  • எனவே, அவர் இந்த மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் ஆனார்.
  • இவர் ஒடிசா மாநிலத்திலிருந்து இந்திய மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் பழங்குடியினத் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்