பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி – குற்றச் சாட்டு
July 31 , 2019 2114 days 705 0
ஏறத்தாழ 30 ஆண்டுகளில் பதவியில் இருக்கும் நீதிபதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலாவது நபராக தற்பொழுது பதவியிலுள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி SN சுக்லா உருவெடுத்து உள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி சுக்லாவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
1991 ஆம் ஆண்டில் K. வீராசாமி (எதிர்) மத்திய அரசு என்ற புகழ்பெற்ற வழக்கில் வழங்கப் பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு வரும் முதலாவது வழக்கு இதுவாகும்.
K. வீராசாமி வழக்கு
இந்த வழக்கில், உயர் நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதற்குக் கூட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இருக்கின்றது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினால் வழங்கப்பட்ட அறிவுரையின் படியே இந்தியக் குடியரசுத் தலைவர் செயல்படுவதற்கான நடைமுறைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.