முதன்மையாகப் பெண்களால் கொண்டாடப்படும் மலர்த் திருவிழாவான பதுக்கம்மா, தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ மாநில விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது துர்கை நவராத்திரியின் போது ஒன்பது நாட்கள் கொண்டாடப் படுகிறது என்பதோடு இது பத்ரபாத அமாவாசை (மஹாளய அமாவாசை) அன்று தொடங்கி செப்டம்பர்-அக்டோபர் மாத காலக் கட்டத்தில் வரும் சதுல பதுக்கம்மா (அஷ்வயுஜ அஷ்டமி) அன்று முடிவடைகிறது.
இந்தத் திருவிழா போதெம்மாவை (பருவமழையின் முடிவைக் குறிக்கும்) தொடர்ந்து வருகிறது என்பதோடு இது ஷரத் ருதுவின் (இலையுதிர் காலம்) தொடக்கத்தைக் குறிப்பதால் பருவகால மாற்றத்தைப் பாரம்பரியச் சடங்குகளுடன் சேர்க்கிறது.