2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த 100 நாட்கள் வாசிப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
படைப்பாக்கம், விமர்சனம் நிறைந்த சிந்தனை, சொற்களஞ்சியம் மற்றும் எழுத்து வடிவிலும் பேச்சு வடிவிலும் திறனை வெளிப்படுத்தும் பாங்கு ஆகியவற்றை இது உருவாக்கும் என்பதால் இது கற்றல் நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
பால்வதிகா முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதன் கீழ் உள்ளடங்குவர்.
இந்தப் பிரச்சாரமானது தாய்மொழி, உள்ளூர் மொழி (அ) வட்டார மொழி போன்ற பிற இந்திய மொழிகள் மீதும் கவனம் செலுத்துகிறது.
இந்த இலக்கிற்கு ஏற்ப பிப்ரவரி 21 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச தாய்மொழி தினத்துடன் ஒருங்கிணைந்து இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.