நிதியமைச்சர் மக்களவையில் 2025 ஆம் ஆண்டு பத்திரச் சந்தை குறியீடு மசோதாவினை அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதா மேலும் விவாதத்திற்காக துறை தொடர்பான நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்படும்.
இது இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியச் சட்டம், 1992; வைப்புத் தொகைச் சட்டம், 1996; மற்றும் பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1956 ஆகியவற்றை ஒரே சட்டமாக/குறியீட்டாக இணைக்கிறது.
இந்த மசோதா, 9 ஆக இருந்த இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15 ஆக அதிகரிக்க முன்மொழிகிறது.
விதிமுறை இணக்கச் சுமையைக் குறைத்தல், ஒழுங்குமுறை நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப் படும் பத்திரச் சந்தைகளை ஆதரித்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மசோதா முதலீட்டாளர் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், நிதிச் சந்தைகளில் வணிகம் செய்வதை எளிதாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது.