ஆதிவாசி கலைஞர் ஆர். கிருஷ்ணன் (பிரபலமாக 'கிட்னா' என்று அழைக்கப்படுபவர்) அவர்களுக்கு மறைவுக்குப் பின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ஆர். கிருஷ்ணன் தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள ஆலு குறும்பர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.
பண்டைய பாறை ஓவியத் தளங்களால், குறிப்பாக நீலகிரியில் உள்ள வெள்ளரிக் கோம்பையில் காணப்படும் ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட துணி ஓவியங்களுக்காக என அவர் அறியப்பட்டார்.
அவர் தனது கலைப் படைப்புகளில் இயற்கைச் சாயங்கள் மற்றும் இழைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கரிம சாயங்களைப் பயன்படுத்தினார்.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலமான இவரின் பணிகள் அலு குறும்பர் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்குப் பங்களித்தது.