January 18 , 2026
4 days
58
- பத்ரகாளி கல்வெட்டு, சோமநாதர் கோயிலின் வரலாற்றுடன் இணைக்கப்பட்ட 12 ஆம் நூற்றாண்டின் முக்கியமான கல்வெட்டுப் பதிவாக சிறப்பிக்கப் படுகிறது.
- பத்ரகாளி கல்வெட்டு குஜராத்தின் பிரபாஸ் படானில், பத்ரகாளி கோயிலின் சுவரில் அமைந்துள்ளது.
- கி.பி 1169 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட இது வாலபி சம்வத் 850 மற்றும் விக்ரம் சம்வத் 1255 உடன் ஒத்திருக்கிறது.
- இந்தக் கல்வெட்டு பல்வேறு காலக் கட்டங்களில் சோமநாதர் கோயிலின் கட்டுமானம் மற்றும் புனரமைப்பு பற்றிய வரலாற்று விவரங்களை வழங்குகிறது.
- இது சோலங்கி வம்சத்தின் குறிப்பாக மன்னர் குமாரபாலரின் ஆட்சிக் காலத்தில் பெறப் பட்ட ஆதரவு குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது.
- இந்தக் கல்வெட்டு, சோலங்கி ஆட்சியாளரின் ஆன்மீக குருவான பரம் பசுபத ஆச்சார்ய ஸ்ரீமான் பவப்ரிஹஸ்பதியின் புகழாரமாகும்.
Post Views:
58