உயிரியல் பன்முகத்தன்மை குறித்த உடன்படிக்கையின் (CBD) அறிவியல், தொழில் நுட்ப மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக்கான துணை அமைப்பின் (SBSTTA-27) 27வது கூட்டம் பனாமாவில் நடைபெற்றது.
2030 ஆம் ஆண்டிற்கான குன்மிங் மாண்ட்ரியல் உலகளாவியப் பல்லுயிர்ப் பெருக்க கட்டமைப்பின் (KMGBF) இலக்குகளில் பதிவான உலகளாவிய முன்னேற்றத்தை இந்தக் கூட்டம் மதிப்பாய்வு செய்தது.
ஆர்மேனியாவின் யெரெவனில் COP17 மாநாட்டிற்கான பரிந்துரைகள் கருத்து வேறுபாடுகள் காரணமாக முழுமையடையாமல் கைவிடப்பட்டன.
பல்லுயிர்-பருவநிலை இணைப்புகள், அயல் ஊடுருவல் உயிரினங்கள், சுகாதாரம் மற்றும் உயிர் வாழும் மாற்றியமைக்கப்பட்ட உயிரினங்களின் ஆபத்து மதிப்பீடு ஆகியவை இந்த விவாதங்களில் அடங்கும்.