பனி உருகுதல் காரணமாக கிரீன்லாந்து கடல்பகுதியில் குறைந்த உப்புத்தன்மை
October 16 , 2017 3012 days 1486 0
வடகிழக்கு கிரீன்லாந்தின் பெருங்கடல் தகவல் முதல் முறையாக கிரீன்லாந்து பனிக்கட்டி உருகுதலின் நீண்டநாள் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கிரீன்லாந்து பனிக்கட்டியின் அதிகப்படியான உருகுதல் கடல்நீர் குறைந்த உப்புத்தன்மையாக மாறுவதற்கு வழிவகுத்துள்ளது.
இந்த குறைந்த உப்புத்தன்மையுடைய கடல்நீர் கடல்வாழ் உயிரினங்களையும், ஐரோப்பாவை வெப்பமாக வைத்திருக்க உதவும் கடல் நீரோட்டங்களையும் பாதிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீன்லாந்து சுற்றுச்சூழல் கண்காணிப்புத் திட்டம் பனிக்கட்டியிலிருந்து உருவாகும் நன்னீர் அப்பனிக் கட்டியை சுற்றியுள்ள கடல்பகுதியின் மேற்தளத்தில் திரண்டு கிரின்லாந்தின் நுழைகழிப் பகுதிகளில் (Fjords) பாய்ந்தோடுவதாக எடுத்துரைக்கிறது.
1983 முதல் 2003 வரையிலான கால அளவைக் காட்டிலும் கிரீன்லாந்து பனிக்கட்டி உருகுதலின் தற்போதைய நிலை இருமடங்காக அதிகரித்துள்ளது.
நுழைகழி (Fjords) என்பது நீண்ட, குறுகலான, ஆழ்ந்த நுழைவாயில் பகுதியாகும். இது கடலில் பனிமூடிய பள்ளத்தாக்கு மூழ்கியதன் காரணமாக ஏற்பட்ட உயரமான பாறைகளுக்கு நடுவே காணப்படும் பகுதியாகும்.