சைபீரிய உறைபனிப் பகுதியிலிருந்து 24,000 ஆண்டுகள் பழமையான நுண்ணிய உயிரினத்தை அறிவியலாளர்கள் மீண்டும் உயிர்ப்பித்ததுடன் அது இனப்பெருக்கம் செய்வதையும் கண்டறிந்துள்ளனர்.
ஊடகங்களில் "ஜாம்பி புழு" என்று பரவலாக அழைக்கப்படுகின்ற இந்த உயிரினம் 'டெலாய்ட் ரோட்டிஃபர்' (ஒரு பல செல் நன்னீர் விலங்கு) ஆகும்.
இது சைபீரியாவில் உள்ள அலசேயா நதிக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு முறையைப் பயன்படுத்தி இது பிந்தைய பிளீஸ்டோசீன் காலத்தைச் சேர்ந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சுமார் -20°C வெப்பநிலையில் யெடோமா உறைபனியில் (பனி நிறைந்த நிரந்தரமாக உறைந்த மண்) உறைந்த நிலையில் இருந்தது.
இது 'கிரிப்டோபயாசிஸ்' (வாழ்க்கை செயல்முறைகள் கிட்டத்தட்ட நின்று விடுவதோடு பூஜ்ஜியத்திற்கு நிகரான வளர்சிதை மாற்ற நிலை) மூலம் உயிர் பிழைத்து உள்ளது.
ஆய்வக நிலைகளில் பனி உருகிய பிறகு, இது நகர்தல் மற்றும் உணவளித்தல் போன்ற செயல்களை மீண்டும் தொடங்கியதோடு பாலிலா முறையில் இனப் பெருக்கம் செய்து தனது குளோன்களை உருவாக்கியது.