பனிச் சறுக்கு போட்டிகளில் 50 உலக கோப்பைகளை வென்ற முதலாவது பெண்
December 25 , 2018 2466 days 732 0
பிரெஞ்சு ஆல்ப்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பைப் பனிச்சறுக்கு போட்டியின் சிலலோம் என்ற பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம் 50 உலகக் கோப்பைகளை வென்ற முதலாவது இளம்பெண்ணாக அமெரிக்காவைச் சேர்ந்த மிக்கேலா ஷிவ்ரின் உருவெடுத்துள்ளார்.
கோர்ச்செவேலில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெறுவதற்காக இவர் ஸ்லோவேகியாவைச் சேர்ந்த பெட்ரா வெல்ஹோயாவை விட 0.29 விநாடிகளுக்கு முன்னரே அப்போட்டியை நிறைவு செய்தார். மேலும் இவர் ஸ்வீடனைச் சேர்ந்த பிரிடா ஹென்ஸ்போட்டரைவிட 0.37 விநாடிக்கு முன்னரே அப்போட்டியை நிறைவு செய்து வெற்றி பெற்றுள்ளார்.