பனிச் சிறுத்தை பற்றிய இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பின் ஆய்வு
July 29 , 2022 1119 days 607 0
இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு அமைப்பானது (ZSI), சமீபத்தில் பனிச்சிறுத்தை பற்றிய ஆய்வை மேற்கொண்டது.
பனிச் சிறுத்தைகளுக்கும், நீலமலையாடு மற்றும் சைபீரிய ஐபெக்ஸ் காட்டாடு போன்ற அதன் இரை இனங்களுக்கும் இடையேயான வாழ்விடப் பயன்பாட்டில் ஒரு வலுவான தொடர்பு உள்ளது.
அந்தப் பகுதிகளை அதன் இரை இனங்கள் நன்கு பயன்படுத்தினால், அங்கு பனிச் சிறுத்தைகள் காணப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக அமையும்.
வேட்டையாடப்படும் இனங்களைப் பொறுத்தவரையில், பனிச்சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் போது இந்த இரை இனங்களை அங்குக் காண்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகும்.
பனிச் சிறுத்தையானது IUCN சிவப்புநிறப் பட்டியலில் 'பாதிக்கப்படக் கூடிய இனமாக' வகைப் படுத்தப் பட்டுள்ளது.
இந்தியாவில், இமாச்சலப் பிரதேசம், லடாக், சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் இது காணப்படுகிறது.