பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 2.24 கோடிக்கும் அதிகமான (22.4 மில்லியன்) பனை விதைகள் நடப்பட்டுள்ளன.
பனை (போராசஸ் ஃபிளாபெல்லிஃபர்) என்பது தமிழ்நாடு, இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் பொதுவாகக் காணப்படும் வறட்சியைத் தாங்கும் மரமாகும்.
பசுமைப் பரவல் மற்றும் சுற்றுச்சூழல் மீளுருவாக்கத்தினை அதிகரிப்பதற்கான மாநில அளவிலான சுற்றுச்சூழல் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விதைப்பு இயக்கம் உள்ளது.
நடப்பட்ட அனைத்து விதைகளும் புவியிடத் தகவல்கள் குறிக்கப் பட்டு கண்காணிப்பு நோக்கங்களுக்காக கைபேசி செயலி மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
மண் வளங்காப்பு, நீர் தக்கவைப்பு மற்றும் நிலையான கிராமப்புற வாழ்வாதாரங்களை ஆதரிப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.