TNPSC Thervupettagam

பனைமரப் பாதுகாப்பு இயக்கம்

September 21 , 2025 14 hrs 0 min 19 0
  • தமிழ்நாடு அரசானது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வெட்டப்படும் ஒவ்வொரு பனைமரத்திற்கும் ஈடாக 10 மரக்கன்றுகளை நடவு செய்யும்.
  • பனை மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை 'உழவன்' (விவசாயி) கைபேசி செயலி மூலம் பெற வேண்டும்.
  • பனை மரம் ஆனது, 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப் பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில், பனை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெறுவது கட்டாயம் என்று வேளாண் அமைச்சர் அறிவித்தார்.
  • தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் கூற்றுப்படி, 2019–2020 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் சுமார் ஐந்து கோடி பனை மரங்கள் இருந்தன.
  • இந்தியாவில் சுமார் 10 கோடி பனை மரங்கள் இருப்பதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள மொத்தப் பனை மரங்களில், ஐந்து கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
  • கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு அதன் மாநில மரத்தைப் பாதுகாக்கும் பணியை செயல்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்