பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றிய உறுப்பினர் - இந்தியா
November 8 , 2018 2461 days 752 0
2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கு பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU- International Telecommunications Union) உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
1952 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றிய ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருந்து வருகிறது.
சமீபத்தில் பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றிய தெற்கு ஆசிய அலுவலகம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க மையம் ஆகியவற்றை புது தில்லியில் அமைக்க பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றியம் முடிவு செய்துள்ளது.