TNPSC Thervupettagam

பன்னாட்டுக் கடல்சார் பாதுகாப்புக் கூட்டணி

August 18 , 2026 13 hrs 0 min 22 0
  • செங்கடல், பாப் அல்-மாண்டெப் நீர்ச்சந்தி மற்றும் ஏடன் வளைகுடா ஆகியவற்றில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சவுதி அரேபியா பன்னாட்டுக் கடல் சார் பாதுகாப்பு கூட்டணியை (MMDC) தொடங்கியுள்ளது.
  • வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று ரியாத்தில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டிற்குப் பிறகு இந்தக் கூட்டணி உருவாக்கப் பட்டது.
  • சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, வங்கதேசம், ஏமன், சோமாலியா, ஜிபூட்டி மற்றும் கொமொரோஸ் உள்ளிட்ட 14 நாடுகள் ஆரம்பத்தில் இந்த அறிவிப்பில் கையெழுத்திட்டன.
  • பன்னாட்டுக் கடல்சார் பாதுகாப்பு கூட்டணியின் தலைமையகம் ரியாத்தில் அமைந்து உள்ளதுடன் மேலும் கூட்டுக் கடல்சார் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு மையங்களையும் இது கொண்டுள்ளது.
  • இதன் முதல் தளபதியாக சவுதி ரியர் அட்மிரல் அப்துல்லா பின் சலேம் அல்-ஷெஹ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்