பன்னாட்டுக் காவல்துறையின் உலகப் பயிற்சிக் கழக வலையமைப்பு
August 20 , 2023 735 days 320 0
மத்தியப் புலனாய்வுப் பிரிவின் பயிற்சிக் கழகமானது, பன்னாட்டுக் காவல்துறையின் உலகப் பயிற்சிக் கழக வலையமைப்பின் ஒரு காணொளி வாயிலான நிகழ்ச்சியில் பங்கேற்றது.
உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்கப் பயிற்சி நிறுவனங்களுக்கிடையேயான கல்வி சார் ஒத்துழைப்பை இந்த வலையமைப்பு ஆதரிக்கிறது.
இந்நிகழ்ச்சியைப் பன்னாட்டுக் காவல்துறையின் உலகப் பயிற்சிக் கழக வலை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் நாட்டினைச் சேர்ந்தப் பன்னாட்டுக் காவல்துறையின் உலகப் புத்தாக்க வளாகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.