உலகப் பொருளாதார மன்றமானது பயண மற்றும் சுற்றுலா போட்டித் திறன் குறியீட்டை (Travel & Tourism Competitiveness Index - TTCI) வெளியிட்டுள்ளது. இது 140 நாடுகளை உலகளாவிய சுற்றுலா மற்றும் பயணங்களில் அந்தந்த நாடுகளின் நிலைகளை ஒப்பிட்டு தரவரிசைப் படுத்தியுள்ளது.
இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ள முதல் 5 நாடுகள் - ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா.
இதில் இந்தியா 34வது இடத்தில் உள்ளது (2017 ஆம் ஆண்டில் 40 ஆக இருந்தது). தெற்காசியாவில் சுற்றுலா செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப் படும் நாடாக இந்தியா விளங்குகின்றது.
ஆசியாவின் மிகவும் போட்டித்திறன் கொண்ட பயண மற்றும் சுற்றுலாப் பொருளாதாரமாக ஜப்பான் உள்ளது.
ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய பயண மற்றும் சுற்றுலாப் பொருளாதாரமாக சீனா விளங்குகின்றது.