உலகப் பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா ஆறு இடங்கள் முன்னேறி 34வது இடத்தைப் பிடித்துள்ளது.
சாதகமான காரணிகள்: வளமான இயற்கை மற்றும் கலாச்சார வளங்கள் மற்றும் இந்தியாவில் வலுவான விலை சார்ந்த போட்டித் திறன்.
தெற்காசியாவின் பயண மற்றும் சுற்றுலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. மேலும் துணைப் பிராந்தியத்தின் மிகவும் போட்டி மிக்க பயண மற்றும் சுற்றுலாப் பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
பயண மற்றும் சுற்றுலாப் போட்டித்திறன் குறியீடானது (Travel & Tourism Competitiveness Index - TTCI) உலகப் பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இதற்கு அடுத்த இடங்களில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
ஆசியாவின் மிகவும் போட்டிமிக்க பயண மற்றும் சுற்றுலாப் பொருளாதாரமாக ஜப்பான் விளங்குகின்றது.