பொது விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) ஆனது விமானப் பயணிகளுக்காக 24×7 பயணிகள் உதவிக் கட்டுப்பாட்டு அறையை (PACR) நிறுவி உள்ளது.
பயணிகள் மத்தியில் எழும் விமானங்கள், விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் தொடர்பான குறைகளை விரைவாகவும் சரியான நேரத்தில் தீர்ப்பதை PACR உறுதி செய்கிறது.
கட்டுப்பாட்டு அறை தேசிய இயங்கலைப் பயணிகள் குறை தீர்க்கும் தளமான AirSewa உடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
விமான தாமதங்கள், ரத்து செய்தல், பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும் பயணப் பெட்டிகள் தொடர்பான சிக்கல்கள் பயணிகள் உறுதிமொழிகளின் படி தீர்க்கப் படுகின்றன.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், PACR 13,000க்கும் மேற்பட்டப் புகார்களை வெற்றிகரமாக தீர்த்து 500+ பயணிகள் அழைப்புகளை நிர்வகித்துள்ளது.