பயன்படுத்தப்படாத மருந்துகள் குறித்த UNEP அறிக்கை 2026
March 20 , 2026 12 hrs 0 min 12 0
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) "பயன்படுத்தப்படாத மருந்துகளைப் பாதுகாப்பாக அகற்றுதல்" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை மனிதன், விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் நல அமைப்புகளை ஒருங்கிணைக்கும் 'ஒரே ஆரோக்கியம்' அணுகுமுறையைப் பரிந்துரைக்கிறது.
மருந்துகளை முறையாக அகற்றாதது நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் (AMR), சுற்றுச் சூழல் நச்சுத்தன்மை மற்றும் நாளமில்லாச் சுரப்பி பாதிப்புகளுக்கு வழி வகுக்கிறது.
உலகளவில் சுமார் 50% மருந்துகள் கழிவுகளாக மாறுகின்றன, மேலும் பயன்படுத்தப் படாத மருந்துகள் அபாயகரமான சுகாதாரக் கழிவுகளில் சுமார் 3% ஆகும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பெரும்பாலும் மருந்து மாசுபாடுகளை முழுமையாக அகற்றுவதில் பயனற்றவையாக உள்ளன.
உயர் வெப்பநிலை எரிப்பு, கழிவுகளை நிலைப் படுத்துதல், பொறியியல் குப்பைக் கிடங்குகள் மற்றும் இணை செயலாக்கம் போன்றவை பரிந்துரைக்கப்பட்ட முறைகள் ஆகும்.