TNPSC Thervupettagam

பயோடெக் முதலீட்டுத் தளம்

September 10 , 2026 3 days 48 0
  • உயிரிதொழில்நுட்பவியல் (பயோடெக்) புத்தொழில் நிறுவனங்களை முதலீட்டாளர்களுடன் இணைப்பதற்காக 'பயோ-நிவேஷ்' (BIO-NIVESH) என்ற தளத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
  • வணிகமயமாக்கலுக்கும் விரிவுபடுத்தலுக்கும் தயார் நிலையில் உள்ள உயிரி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் தனியார் முதலீட்டை அதிகரிப்பதை இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் முதல் பதிப்பு 20 உயிரிதொழில்நுட்ப மற்றும் ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களையும் சுமார் 50 முதலீட்டாளர்களையும் ஒன்றிணைத்தது.
  • ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு (RDI) நிதியம் ₹1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது, இதில் உயிரிதொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கான இரண்டாம் நிலை நிதி மேலாளராக உயிரிதொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி சபை (BIRAC) செயல்படுகிறது.
  • பிராந்திய உயிரிதொழில்நுட்பச் சுற்றுச்சூழல் அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக, எதிர்கால பதிப்புகளை வெவ்வேறு நகரங்களில் நடத்துவதற்கான ஒரு தொடர்ச்சியான தளமாக இந்த முயற்சி திட்டமிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்