இந்திய அரசானது பிரசுராம் கண்ட் எனப்படும் தளத்தின் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
இது அருணாச்சலப் பிரதேசத்தில் பாயும் லோஹித் நதியின் தாழ்நிலைப் பகுதிகளில் அமைந்துள்ள பிரம்மபுத்திர பீடபூமிப் பகுதியில் அமைந்த ஒரு இந்துமத யாத்திரைத் தளமாகும்.
இந்தத் திட்டமானது சுற்றுலா அமைச்சகத்தின் யாத்திரைப் புத்துயிர்ப்பு மற்றும் ஆன்மீகம், பாரம்பரிய தள மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.