இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் (UPI) ஆனது தற்போது பயனர்கள் குறுகிய கால பரஸ்பர நிதி இருப்புகளைப் பயன்படுத்தி நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கிறது.
பயனர்கள் தங்கள் பரஸ்பர நிதிக் கணக்குகளை தங்கள் UPI அடையாள எண்ணுடன் (ID) இணைத்து, பணம் செலுத்துதலின் போது இந்தப் புதிய கட்டண விருப்பத் தேர்வினைத் தேர்வு செய்யலாம்.
வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டிய அவசியமின்றி, பரஸ்பர நிதியிலிருந்து பணம் உடனடியாகக் கழிக்கப்படுகிறது.
இந்த அம்சம் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் (SEBI) ஒழுங்கு படுத்தப் படுகிறது மற்றும் UPI அமைப்பின் பாதுகாப்பான அமைப்புடன் இது நன்கு ஒருங்கிணைக்கப் படுகிறது.
மேலும் விரிவுபடுத்துவதற்கானத் திட்டங்களுடன் தற்போது, இது தேர்ந்தெடுக்கப் பட்ட வணிகர்கள், இயங்கலை தளங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைக் கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்கப்படுகிறது.