- பரிவர்த்தன் தேர்தல் அறக்கட்டளையானது 2019-20 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பிர்லா எனும் குழுமத்திடமிருந்து பெற்ற 3 கோடி ரூபாயை அநாமதேயமாக தெரிவித்துள்ளது.
- ஒரு தேர்தல் அறக்கட்டளையானது பெயர் தெரிவிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்குப் பெருநிறுவன நன்கொடைகளை வழங்குவதற்காக வேண்டி தேர்தல் பத்திரங்களை பயன்படுத்துவது இதுவே முதன்முறையாகும்.
- மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான சங்கமானது (Association for Democratic Reforms) தேர்தல் பத்திரங்களை இதற்காகப் பயன்படுத்துவது 2013 ஆம் ஆண்டு தேர்தல் அறக்கட்டளைத் திட்டம் மற்றும் 1962 ஆம் ஆண்டு வருமான வரி விதிகள் ஆகியவற்றின் கீழ் நீதித் தன்மைக்குப் புறம்பானது எனக் குற்றம் சாட்டி உள்ளது.
தேர்தல் அறக்கட்டளைத் திட்டம், 2013
- தேர்தல் அறக்கட்டளை என்பது எந்தவொரு நபரிடமிருந்தும் பெறப்படும் நன்கொடைகளைப் பெற்று ஒழுங்கான முறையில் கையாளுவதற்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
- இந்தத் திட்டமானது மத்திய நேரடி வரிகள் வாரியத்தினால் அறிவிக்கப்பட்டதாகும்.
- தேர்தல் அறக்கட்டளைகள் பெறும் பங்களிப்புகளை அரசியல் கட்சிகளுக்கு வழங்குவதே அதனுடைய முதன்மை நோக்கமாகும்.
- வெளிநாட்டுக் குடிமகன்கள் (அ) நிறுவனங்களிடமிருந்து நன்கொடையினைப் பெறுவதற்கு இவற்றிற்கு அனுமதி கிடையாது.
- தேர்தல் அறக்கட்டளையானது பின்வருவனவற்றின் மூலம் தன்னார்வப் பங்களிப்புகளைப் பெறலாம்.
- இந்தியக் குடிமகன்,
- இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் மற்றும்
- இந்தியாவிலுள்ள ஒரு நிறுவனம் (அ) இந்துக் குடும்பம் (அ) தனிநபர் சங்கம் (அ) தனிநபர் அமைப்பு