மத்திய ஜவுளித் துறை அமைச்சகமானது அதன் ஆலோசனை அமைப்பான பருத்தி ஆலோசனை வாரியத்தை (CAB - Cotton Advisory Board) கலைத்துள்ளது.
மேலும் அனைத்து 8 ஜவுளி ஆராய்ச்சிக் கழகங்களும் (TRAs - Textiles Research Associations) இந்த அமைச்சகத்தின் கீழிருந்து கலைக்கப் படுவதாகவும் அறிவித்து உள்ளது.
இனிமேல், TRAsகள் ஜவுளித் துறை தொடர்பான ஆராய்ச்சி, பரிசோதனை மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட அமைப்புகளாகச் செயல்படும்,.
மத்திய அரசின் நிதியினால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சொத்துகளின் அகற்றம்/ விற்பனை/பரிமாற்றம் ஆகியவற்றிற்கு இந்த அமைச்சகத்தின் முன்கூட்டியே குறிப்பிட்ட ஒப்புதலானது தேவைப்படும்.