பருத்தி விலையைக் குறைக்க, பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட அனைத்து சுங்க வரிகளிலிருந்தும் விலக்கு அளிப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசினால் அறிவிக்கப்பட்ட இந்த வரி விலக்கானது, துணி, நூல், முழுத் தயாரிப்புகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜவுளி விநியோகப் பிரிவிற்குப் பலன் அளிக்கும் என்றும், நுகர்வோர் மற்றும் ஜவுளித் தொழிலுக்கு வேண்டிய ஒரு உதவியை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கச்சா பருத்தி மீது விதிக்கப்பட்ட 5 சதவீத விவசாய உள்கட்டமைப்பு & மேம்பாட்டு வரி மற்றும் 5 சதவீத அடிப்படைச் சுங்க வரி ஆகியவையும் நீக்கப்பட வேண்டும் என்று தொழில்துறையினர் கோரியுள்ளனர்.
பருத்தி இறக்குமதி மீதான வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு உள்வரி மற்றும் சுங்க வரி விலக்கானது மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தினால் அறிவிக்கப் பட்டுள்ளது.