TNPSC Thervupettagam

பருத்தி உற்பத்தித் திறனுக்கான திட்டம்

May 15 , 2026 15 hrs 0 min 19 0
  • 2026-27 முதல் 2030-31 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு ₹5,659 கோடி மதிப்பீட்டில் பருத்தி உற்பத்தித்திறனுக்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
  • பருத்தி விளைச்சல், தரம், விவசாயிகளின் வருமானம் மற்றும் இந்தியாவின் ஜவுளி மதிப்புச் சங்கிலியை மேம்படுத்துவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் ஜவுளி அமைச்சகம் இணைந்து இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமம் (CSIR) ஆகியவற்றின் ஆதரவுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்தும்.
  • இந்தத் திட்டம் முதற்கட்டமாக 14 முக்கிய பருத்தி உற்பத்தி மாநிலங்களில் உள்ள 140 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
  • பருத்தி உற்பத்தித்திறனை ஹெக்டேருக்கு சுமார் 440 கிலோவிலிருந்து 755 கிலோவாக உயர்த்தவும், 2031 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தியை 498 லட்சம் பொதிகள்/பேல்களாக உயர்த்தவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளராக இருந்தாலும், இளஞ்சிவப்புப் புழுத் தாக்குதல், வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் குறைந்த உற்பத்தித் திறன் போன்ற சவால்களை எதிர்கொள்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்