பருவநிலை சார்ந்த ஒழுங்கற்ற நிலை தொடர்பான நிதி வழங்கீடு பற்றிய அறிக்கை
April 19 , 2023 854 days 400 0
2016 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து உலகின் 60 பெரிய வங்கிகள் 5.5 டிரில்லியன் டாலர் அல்லது 4,49,36,265 கோடி ருபாயினைப் புதைபடிவ எரிபொருள் சார்ந்தத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக செலவிட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டில் புதைபடிவ எரிபொருள் துறைக்கான மொத்த நிதியுதவியில் 28% வழங்கிய அமெரிக்கா, புதைபடிவ எரிபொருட்கள் துறைக்கான ஒரு முதன்மை நிதி வழங்குநராக இருந்தது.
2022 ஆம் ஆண்டில் மட்டும், புதைபடிவ எரிபொருள் சார்ந்தத் திட்ட நிதிக்காக 673 பில்லியன் டாலர்கள் செலவிடப் பட்டுள்ளன.
கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 2020-2022 ஆகிய ஆண்டுகளில் புதைபடிவ எரிபொருள் துறைக்கான முன்னணி நிதியளிப்பாளர்களாக இருந்தன.
G7 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் 2020-2022 ஆகிய ஆண்டுகளில் புதைபடிவ எரி பொருள் துறைக்காக தனது பொது நிதியில் 73 பில்லியன் டாலர் நிதியினை வழங்கி உள்ளன.