பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற COP30 மாநாட்டில் "பருவநிலை மற்றும் இயற்கை நிதி"க்கான தேசிய தளத்தை இந்தியா அறிவித்தது.
இந்தத் தளம் ஆனது 2015 ஆம் ஆண்டு முதல் உலகளவில் 19 பில்லியன் டாலரை உறுதி செய்துள்ள பசுமை பருவநிலை நிதியம் (GCF) மூலம் செயல்படும்.
இந்தியா மற்ற 12 நாடுகளுடனும் ஆப்பிரிக்க பிராந்திய கூட்டணியுடனும் இணைந்து, தணிப்பு மற்றும் ஏற்பு நடவடிக்கைகளுக்காகப் பருவநிலை நிதியை அணுகுவதை ஒழுங்குபடுத்துகிறது.
இங்கு இந்தியா, தூய்மையான எரிசக்தி, நீர், போக்குவரத்து மற்றும் பருவநிலை சார் புத்தொழில் நிறுவனங்களில் 11 திட்டங்களில் 782 மில்லியன் டாலர் மதிப்புள்ள GCF உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது.
இந்தத் தளம் அதன் ஆரம்பக் கட்டத்தில் ஆப்பிரிக்கா பருவநிலை அறக்கட்டளையால் வழங்கப்படும் 4 மில்லியன் டாலர் ஆரம்ப நிதியுடன் ஆதரிக்கப்படும்.